I am a Senior Cyber Security Architect working for a leading US firm and a traveling speaker with big dreams. I am also a popular podcaster, content creator, motivational speaker, technical speaker, social helper, and volunteer. I was born as the first son in a family that lived in poverty in a village called Tiruvadavoor near Madurai. My paternal grandmother raised me since my parents were unable to do so. I have no memories of eating three meals a day during my childhood. My family relied on agriculture, which left us with only debt. My sister and brother also experienced poverty. Despite these hardships, I was determined to overcome poverty.


My grandmother would go to great lengths to find food for us, and our houseguests were often creditors and people who celebrated our difficulties. I attended a private school for my nursery education but was kicked out after a week for not paying 50 rupees for having. The idea that education is the key to growth and progress became deeply ingrained in my mind. I then started my education in a government school, where the teachers played a crucial role in my life. I proved my quality through education and continued to be a great student. At age six, I held a live mic and started speaking, and the people there clapped their hands. I fell in love with speaking and entertaining, and that love continues to this day. Despite the poverty, I continued to grow through my education. 


My first victory in life was when I got 483/500 marks and was the district topper in the 10th class exam. I was a big fan of Abdul Kalam at that age, and his words “Dream on” continue to inspire me. I dreamed, overcame difficulties, and saw success. This moment proved to the world that I was an achiever who refused to give up. My family saw me at dawn, and it disrupted my further schooling. However, many good minds helped me on the day of breaking the tracks, and great minds kept pushing me. I studied engineering and received a gold medal as the topper in college.


I had trouble with English because I studied in Tamil, but I persevered and tried day and night to get success. I focused on winning, helping others, and being in good shape. Although I did not experience the pleasures others did, I continued happily on my journey. Even after college, my interest continued to be in stage speaking and entertaining people, often leading me to work late nights at various television and radio portals. Despite some success, my family situation kept me running in IT.


Through hard work, I came to America in four years and joined a radio station as a volunteer on my first day of arrival. Bharti's words, “Don't live like a normal person,” stayed with me. Due to continuous efforts, I joined big American companies with big responsibilities. My work for Tamil and humanity continued, and my voice was broadcasted in US Tamil FM, Tamerica TV, Tamil America TV, WebTamil, and all media. I created a brand called RJ Mano, and as a premier podcaster, I continue to inspire many minds.


From being a farmer's son to being a complete human being today, I am an ordinary man who dreams of giving back to society. Always believe that you can achieve anything, don't live for others, don't lose heart, and keep fighting until you win. You have the power to control your life, and anything that passes. Everything is possible.


-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அமெரிக்காவின் முன்னணி பெரிய நிறுவனத்தில் ஆர்கிடெக்டாகவும் மற்றும் மனதில் பெரிய கனவுகளோடு பேச்சாளராகவும், ஆர்.ஜே மற்றும் வி.ஜே, பிரபல Podcaster ஆகவும் பயணிக்கும் நான்,


மதுரைக்கு அருகில் உள்ள திருவாதவூர் என்னும் கிராமத்தில் ஒரு குடிசை வீட்டில் அடுத்த வேளைக்கு உணவு இருக்குமா என்ற ஏக்கத்துடன் பயணித்த குடும்பத்தில் முதல் மகனாக பிறக்கிறேன். தன் தாயை விட முழுக்க முழுக்க என் அப்பத்தாவால் வறுமையை கடந்து வளர்க்கப்படுகிறேன். எனது குழந்தை பருவத்தில் நான் மூன்று வேளை சாப்பிட்டதாக எனக்கு எந்த ஒரு நினைவும் இருக்கவில்லை. கஷ்டமும் வறுமையும் என்னை துரத்தியே வாழ்க்கை தொடர்ந்து கொண்டிருந்தது. விவசாயம் மட்டுமே நம்பியே என் குடும்பத்திற்கு கடன் மட்டுமே மிச்சமானது. நான் மட்டும் இல்லாமல், எனக்கு ஒரு தங்கையும் தம்பியும் இணைந்து இந்த வறுமையை பங்கு போட ஆரம்பித்தனர். நான் இந்த வறுமையையும் கொடுமையும் வென்றே தீர வேண்டும் என்று தினம் தினம் அழுத என் கண்கள் எப்படி முடியும் என்ற கேள்வியையும் என் மனதில் ஆழமாக கேட்க ஆரம்பித்தது. 


எனது அப்பத்தா மட்டுமே முழுக்க முழுக்க படாத கஷ்டம் பட்டு எங்களுக்கு உணவு தேடி கொண்டு வருவாள். எங்கள் வீட்டுக்கு வரும் விருந்தாளிகள் என்றுமே கடன்காரர்களாகவும் மற்றும் எங்கள் கஷ்டத்தை கண்டு சந்தோசம் கொள்ளும் சொந்த காரர்களாகவுமே இருந்தனர். 


நான் முதலில் ஒரு தனியார் பள்ளியில் மழலை கல்வி பெற சென்றேன், ஒரு வாரத்திலேயே எனது காதுகளை திருகி 50 ரூபாய் கட்ட முடியாமல் என்னை விரட்டி அடித்தனர். கல்வியும் காசாக மாறியதே என்ற எண்ணமும் கல்வியால் மட்டுமே நம்மால் வளர முடியும் என்ற எண்ணமும், கண்டிப்பாக இந்த உலகத்தில் முன்னேற வேண்டும் என்ற எண்ணமும் என் மனதில் ஆழமாக பதிந்தது. உடனடியாக நான் அரசு பள்ளியில் கல்வி பயில ஆரம்பித்தேன். எனது வாழ்க்கையில் ஆசிரயர்களும் மிக முக்கிய காரணம் நான் இந்த நிலைமைக்கு இருப்பதில். அன்று முதல் நான் என்றுமே எனது தரத்தை கல்வி மூலம் நிரூபிக்க ஆரம்பித்தேன். முதல் மாணவனாக என்றுமே தொடர்ந்தேன். எனது ஆறு வயதில் எனது உயிரான மைக்கை பிடித்து பேச ஆரம்பித்தேன். அப்போது அங்கிருந்த மக்கள் விடாது கைகளை தட்டினர். 


அன்று எனக்கு இந்த மைக் மீதும் கைதட்டல்கள் மீதும் ஒரு இனம் புரியா காதல். இன்றும் தொடர்கிறது இந்த காதல். வறுமைக்கு இடையிலும் முண்டி  மோதி தொடர்ந்து வளர்த்து கொண்டிருந்தேன். என் வாழ்க்கையின் முதல் வெற்றி, என்னை நான் முழுதும் உணர ஆரம்பித்த தருணம் அதுவே. 10ம் வகுப்பு தேர்வில் நான் மாவட்டத்தில் முதலிடம் 483/500 மார்க்குகள் பெற்றது. மறக்க முடியாத தருணம் அது. அந்த வயதில் நான் அப்துல் கலாமின் தீவிர ரசிகன். அவரின் வரிகளான "கனவு காணுங்கள்" என் மனதில் என்றுமே ஒளித்து கொண்டு இருக்கும். கனவு கண்டேன் கஷ்டங்களை கடந்தேன் வெற்றியும் கண்டேன். அன்று நீயெல்லாம் ஒரு ஆளா  என்று கேட்ட உலகத்திற்கு நான் ஒரு சாதனையாளன் என்று நிரூபித்த தருணம் அதுவே. சந்தோசம் ஒரு பக்கம் இருந்தாலும் மறு பக்கம் மீண்டும் வறுமை இழுத்தது பின்னால் . எனது குடும்பமே என்னை விடியலாக பார்த்தது. அடுத்து பள்ளிப்படிப்பை தொடர தடங்கல். தடங்களை தகர்க்கெறிய அன்று நிறைய நல்ல மனங்கள் உதவின, பெரிய மனங்கள் என்னை தொடர்ந்து உந்தி தள்ளின. நான் விடவில்லை ஏனென்றால் போராட்டம் ஒன்றும் புதியது இல்லை எனக்கு. தொடர்ந்து இன்ஜினியரிங் படித்து முடித்தேன் மற்றும் முதல் மாணவனாக கல்லூரியில் கோல்ட் மெடலும் பெற்றேன். 


படித்தது தமிழில் என்பதால் ஆங்கிலத்தால் மிகவும் கஷ்டம் அனுபவித்தேன். கேளிக்கைகளுக்கு உள்ளானேன். அன்று புரிந்தது ஆங்கிலம் என்பது ஒரு மொழி திறமையைல்ல என்பது. இரவு பகலாக தொடர்ந்த முயன்றேன் வெற்றிகளை பெற. எனது முழுக்கவனமும் வெற்றி பெறுவதிலும் நாம் மற்றவர்குளுக்கு உதவ வேண்டும் நாம் நல்ல நிலைமையில் இருக்க வேண்டும் என்பதிலும் மட்டுமே இருந்தது.


மற்றவர்கள் அனுபவித்த எந்த இன்பமும் எனக்கு கிடைக்கவில்லை என்றாலும் எனது என்ன ஓட்டத்தில் நான் மிக மகிழ்ச்சியாக தொடர்ந்தேன். கல்லூரி முடித்தவுடன் வேலை. அப்பொழுதும் எனது மனது என்னை உறங்க விடவில்லை. எனது ஆர்வம் என்றுமே மேடை பேச்சிலும் மக்களை சந்தோச படுத்துவதிலும் அவர்களை உற்சாகப்படுத்துவதிலும் தொடர்ந்தது, இதற்காக எத்தனையோ முறை இரவு நேர வேலையை முடித்து பல்வேறு தொலைக்காட்சி மற்றும் ரேடியோ வாசல்களில் நின்ற காலம் அது. சில வெற்றிகள் இருந்தாலும் எனது குடும்ப சூழ்நிலை என்னை தொடர்ந்து IT  பணியில் ஓட  வைத்தது.


கடின உழைப்பால் 4 வருடத்தில் அமெரிக்கா வந்து இறங்கினேன். வந்து இறங்கிய முதல் நாளில் ஒரு வானொலியில் தன்னார்வலராக இணைந்தேன். என் மனதில் என்றுமே பாரதியின் வரிகள் ஒளித்து கொண்டே இருக்கும் “பல வேடிக்கை மனிதரைப் போல்  வாழ்ந்து விட வேண்டாம்” என்று.  


தொடர்ந்த முயற்சியால் அமெரிக்க பெரிய கம்பெனிகளில் பெரிய பொறுப்பில் இணைந்தேன். இது ஒரு பக்கம் இருக்க தமிழுக்காகவும் மனிதர்களுக்காகவும் என் பணி தொடர்ந்து கொண்டே இருந்தது.


US  தமிழ் FM , Tamerica டிவி, தமிழ் அமெரிக்கா டிவி, வலைத்தமிழ் மற்றும் அனைத்து ஊடங்களிலும் எனது குரல் ஒலித்து கொண்டே இருந்தது. தமிழ் சங்களில் இணைந்து தமிழ் பணியும் தொடர்ந்து ஆற்றிக்கொண்டே வருகிறேன். 


RJ மனோ என்ற brandஐ உருவாக்கினேன். இன்று முதன்மையான podcaster  ஆக நிறைய மனங்களை உந்தி தள்ளும் ஊக்கத்தை தொடர்ந்து கொடுத்து வருகிறேன். எனக்கு கிடைத்த இந்த அனுபவம் பாடமும் எல்லாருக்கும் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தொடர்ந்து போராடி வருகிறேன்.


விவசாயி மகன் முதல் இன்று முழுமையான மனிதனாக என் சமூகத்திற்கு திருப்பி என்னால் கொடுக்க முடியும் என்ற கனவுடன் வாழும் சாதாரணமாக மனிதன் நான் சொல்வது.


உங்களால் என்றும் முடியும் என்று நம்புங்கள்.

அடுத்தவர்களுக்காக  வாழாதீர்கள்!

மனம் தளராதீர்கள்!

வெற்றி பெறும்வரை தொடர்ந்து போராடுங்கள்!

உங்கள் வாழ்க்கையை மற்றும் சக்தி உங்களிடம் மட்டுமே உள்ளது!

இதுவும் கடந்து போகும்! எதுவும் கடந்து போகும்!

எல்லாம் சாத்தியமே!

இன்றைய நாள் மட்டுமே நிரந்தரம். இன்றைய உழைப்பு நாளைய இன்றையை 

இனிமையாக்கும்!

நீங்கள் என்றுமே உயர்ந்தவர்கள்!


நல்ல மனிதனாக வாழ்வதே சாதனைதான்!


மண் பயனுற வாழ்வதே எனது கனவு.


என்னால் முடியுமென்றால் உங்களால் முடியாதா?


முயன்றே  வாழ்ந்திடுங்கள்!


Lead Cyber Security Architect 

Motivational Speaker ,Social Worker ,

RJ/VJ Top Podcaster in Tamil self Help category,

Entertainer,content creator, Cyber Security Awareness Speaker

Technical Speaker in Cyber Security World.